SuperTopAds

94 இலட்சம் சிறுவர்களுக்கு தொற்று!! -கொரோனாவால் திணறும் அமெரிக்கா-

ஆசிரியர் - Editor II
94 இலட்சம் சிறுவர்களுக்கு தொற்று!! -கொரோனாவால் திணறும் அமெரிக்கா-

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து 94 இலட்சம் சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் வைத்திய சங்கத்தின் அண்மைய அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையின்படி, கடந்த 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மொத்தம் 9,452,491 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.