இலங்கை தேசிய அணியில் இடம் பிடிக்க இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு!! -திறமைகளை வெளிப்படுத்த புதிய கிரிக்கெட் சுற்றுப் போட்டி அறிமுகம்-
நாட்டில் உயர்தர உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாக தேசிய சுப்பர் லீக் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இப் போட்டிகள் தேசிய அணிக்கான வீரர்களை தெரிவு செய்வதனை முதன்மை நோக்காக கொண்டு நடத்தப்படவுள்ளது. தேசிய சுப்பர் லீக்கானது கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய அணிகளை உள்ளடக்கியிருக்கும்.
நாட்டின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் பங்கெடுப்பார்கள். இதன்மூலம் அவர்களின் திறமைகளை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு அவதானிக்கும். முதல்தர பிரீமியர் கழக போட்டியில் விளையாடும் 26 முதல்தர கழகங்கள் கீழே உள்ளவாறு மேற்கண்ட அணிகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் அந்தந்த தேசிய சுப்பர் லீக் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கப்பட்ட கழகங்களிலிருந்து இருந்து இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
50 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இத் தொடரில் ஒவ்வொரு தேசிய சுப்பர் லீக் அணியிலும் ஒரு தலைமைப் பயிற்சியாளர் மற்றும் உதவித் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் துணைப் பணியாளர்கள் குழுவொன்று செயற்படும்.
இந்த தொடர் எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.