யாழ்.தமிழருக்கு கனடாவில் நடந்த விபரீதம்!! -மக்களின் உதவி கோரும் பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
யாழ்.தமிழருக்கு கனடாவில் நடந்த விபரீதம்!! -மக்களின் உதவி கோரும் பொலிஸ்-

கனடா - மிசிசாகாவில் கடந்த மாதம் நடந்த விபத்தில் உயிரிழந்த 35 வயதான யாழ்ப்பாண தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடந்த குறித்த விபத்தில் சுரேஷ் தர்மகுலசிங்கம் என்னும் இலங்கை தமிழர் உயிரிழந்தார். அவர் 2010 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது, 2008-2012 குழசன நுளஉயிந ளுருஏ என்ற கார் அவர் மீது மோதியுள்ளது.

கறுப்பு நிறத்தில் இருப்பதாக நம்பப்படும் அந்த காரின் சாரதி, விபத்துக்குள்ளன சுரேஷ் தர்மகுலசிங்கத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

தர்மகுலசிங்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தர்மகுலசிங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக வாகனத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் கலந்தாலோசித்து பொலிஸில் சரணடையுமாறு விசாரணையளர்கள் கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு காணொளி அல்லது வேறேதேனும் காணொளி இருப்பவர்கள் பொலிஸார் அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு