SuperTopAds

ஆப்கானில் நிலநடுக்கம்!! -வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
ஆப்கானில் நிலநடுக்கம்!! -வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி-

மேற்கு ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு மாகாணமான பட்கிஸில் உள்ள காதிஸ் மாவட்டத்தில் திடீரென 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் திங்கட்கிழமை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் வீடுகளின் கூரைகள் இடிந்து வீழ்ந்ததில், பலர் உயிரிழந்துள்ளதாக மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பெண்களும், 4 குழந்தைகள், சிறுவர்கள் அடங்குவதாகவும் மற்றும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.