நான்காவது ஏவுகணை சோதனை!! -இன்று அதிகாலை நடத்தியது வட கொரியா-

வடகொரியா அரசாங்கம் பாலிஸ்டிக் ஏவுகணை எனச் சந்தேகிக்கப்படும் மற்றொரு ஏவுகணையை இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
இந்த மாதத்தில் வட கொரியா நடத்திய 4 ஆவது ஏவுகணை சோதனையாக இது அமைந்துள்ளதுடன், வட கொரிய அதிகாரிகள் ஐவருக்கு அமெரிக்கா தடை விதித்த பின்னர் ஏவப்பட்ட இரண்டாவது எவுகணையாகவும் இது அமைந்தது.
அதன் கிழக்கு கடற்கரையில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியதை தென்கொரியா உறுதி செய்துள்ளது. எனினும் இது எந்த வகையான ஏவுகணை என உறுதி செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.