தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்யுங்கள்!! -பிலிப்பைன் அரசு அதிரடி உத்தரவு-

பிலிப்பைன் நாட்டில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் எச்சரிக்கை செய்துள்ளது.
அந்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி தடுப்பூசி செலுத்தாதவர்கள் அவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கைது செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ஜனாதிபதி டொடி ரிஹோ டுடர்டி தெரிவிக்கையில், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.