SuperTopAds

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி!! -ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தி வட கொரியா அதிரடி-

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி!! -ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தி வட கொரியா அதிரடி-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வட கொரியா கூறி உள்ளது. 

நேற்று நடந்த இந்த சோதனையானது, இராணுவத்தின் ரயில் ஏவுகணைப் படைப்பிரிவின் எச்சரிக்கை நிலையை சரிபார்க்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

திடீரென வந்த அறிவிப்பு மற்றும் ஏவுகணை சோதனைக்கான உத்தரவை தொடர்ந்து, இராணுவத்தினர் விரைவாக ஏவுதளத்திற்கு சென்றதாகவும், கடல் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் இரண்டு வழிகாட்டுதல் ஏவுகணைகளை ஏவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பெட்டிகளில் இருந்து இரண்டு வெவ்வேறு ஏவுகணைகள் சீறிப் பாய்வது போன்ற புகைப்படங்களை ரோடாங் சின்முன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.