ஒமிக்ரோனை கட்டுப்படுத்த கடும் போராட்டம்!! -சீனா அரசு தீவிர நடவடிக்கை-

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஆபத்தான ஒமிக்ரோன் உருத்திரிவு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா அரசாங்கம் கடுமையாகப் போராடி வருகிறது.
இதன்படி புதிய திரிபு நாட்டுக்குள் தீவிரமடையாது கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது.
அந்நாட்டில் நேற்று உள்நாட்டில் 104 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவானதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
தென் சீனாவின் ஜுஹாய் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை 7 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.