பட்டினியால் மரணத்தின் விளம்பில் ஆப்கான் மக்கள்!! -எச்சரிக்கும் ஐ.நா-

ஆசிரியர் - Editor II
பட்டினியால் மரணத்தின் விளம்பில் ஆப்கான் மக்கள்!! -எச்சரிக்கும் ஐ.நா-

ஆப்கானில் பசியால் உயிரிழக்கும் மக்களை காப்பாற்ற 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானியர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டியினால் வாடி வருகின்றனர். மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க சர்வதேச நிதி அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதேவேளையில், அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்கவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுக்கிறேன் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு