மோதல் போக்கை கடைப்பிடித்தால் எதிர்வினையை சந்திக்க நேரிடும்!! -அமெரிக்காவை எச்சரிக்கும் என வட கொரியா-

ஆசிரியர் - Editor II
மோதல் போக்கை கடைப்பிடித்தால் எதிர்வினையை சந்திக்க நேரிடும்!! -அமெரிக்காவை எச்சரிக்கும் என வட கொரியா-

ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வரும் நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதை கண்டித்துள்ள வடகொரியா நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்கா ஒரு மோதல் நிலைப்பாட்டை கடைப்பிடித்தால் அதற்கு கடுமையான எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. 


Radio