2 கோடி பேர் இரும்பு பெட்டிமுகாமுக்குள் அடைத்து தனிமைப்படுத்தல்!! -சீனா அரசின் வெறிச் செயல்-

ஆசிரியர் - Editor II
2 கோடி பேர் இரும்பு பெட்டிமுகாமுக்குள் அடைத்து தனிமைப்படுத்தல்!! -சீனா அரசின் வெறிச் செயல்-

சீனா நாட்டில் புதிதாக இருவருக்கு ஆபத்தான ஒமைக்ரான் திரிபு வைரஸ் தொற்று அறிகுறி ஏற்பட்டதால் அந்நாட்டில் உள்ள 2 கோடிபேர் இரும்பு பெட்டி முகாமுக்குள் அடைத்துவைக்கப்பட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை இரும்பு பெட்டிகளில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்நாட்டின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து ’பூஜ்ஜிய கொரோனா’ என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க இலட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இரும்பு பெட்டிகளில் 2 வாரம் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவு வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாமல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு