திருமண நிகழ்வில் பாடலுக்கு நடனமாடிய மணமகள்!! -கோபத்தால் உடன் விவாகரத்து கொடுத்த மணமகன்-

ஆசிரியர் - Editor II
திருமண நிகழ்வில் பாடலுக்கு நடனமாடிய மணமகள்!! -கோபத்தால் உடன் விவாகரத்து கொடுத்த மணமகன்-

இராக்கில் பாடல் ஒன்றுக்கு மணமகள் நடனம் ஆடியதற்காக திருமணமான சில நாட்களிலேயே மணமகன் அவரை விவாகரத்து செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

மத்தியக் கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரை அங்கு பெண்களுக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகள் எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகும். தங்களுக்குப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, பிடித்த உடையை அணிவது, பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது என அனைத்தும் விமர்சனத்துக்கு உள்ளாகும். தண்டனைகளும் உண்டு.

இவ்வாறான சூழலில்தான் ஆதிக்கம் நிறைந்த வரிகள் உடைய பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியதற்காக மணமகளை, மணமகன் விவாகரத்து செய்துள்ளார். இராக் தலைநகர் பாக்தாத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

விவாகரத்து செய்யும் அளவுக்கு அந்தப் பாடலில் “நான் ஆதிக்கம் நிறைந்தவள். உன்னைக் கட்டுக்குள் வைப்பேன்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இப்பாடலுக்கு திருமணம் முடிந்த கையோடு நடனம் ஆடியதற்காகத்தான் மணமகள் மீது மணமகனும் அவரது குடும்பத்தினரும் கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் மணப்பெண்ணை மணமகன் விவகரத்து செய்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு