விமானி அறைக்குள் புகுந்து திடீர் தாக்குதல்!! -கட்டுப்பாட்டு கருவிகளை அடித்து நொருக்கியதால் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
விமானி அறைக்குள் புகுந்து திடீர் தாக்குதல்!! -கட்டுப்பாட்டு கருவிகளை அடித்து நொருக்கியதால் பரபரப்பு-

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்தியதால் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமாக போயிங் 737-800 விமானம் பயணிக்க ஆயத்தமானது. 

இந்த விமானத்தில் 121 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் (ஊழஉமிவை) புகுந்து, கட்டுப்பாட்டு கருவிகளை கண்மூடித்தனமாக தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த பயணி ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Radio