பானுகவை சந்தித்த நாமல் ராஜபக்ஷ!! -ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறும் பணிப்பு-

ஆசிரியர் - Editor II
பானுகவை சந்தித்த நாமல் ராஜபக்ஷ!! -ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறும் பணிப்பு-

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை இன்று புதன்கிழமைi காலை அலரி மாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் பானுக ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவினை பானுக ராபக்ஷ ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு