ஹீரோவாக களமிறங்கும் சூரி!!

ஆசிரியர் - Editor II
ஹீரோவாக களமிறங்கும் சூரி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் பரோட்டா சூரி, வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தை தொடர்ந்து அவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்குனர் அமீர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் பரோட்டா சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. பின் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி படத்திற்கு 'விடுதலை' என்று பெயரிடப்பட்டு சில புகைப்படங்களும் வெளியாகியது.

இதனை தொடர்ந்து டான், விருமன், எதற்கும் துணிந்தவன், போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரோட்டா சூரி. தற்போது இயக்குனர் அமீர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு