ஆப்கானுக்கு 308 மில்லியன் டொலர்கள்!! -வழங்கிறது அமெரிக்கா-

ஆப்கானிஸ்தானுக்கு, மேலும் 308 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க திட்டமிடுவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஒக்டோபர் முதல் ஆப்கானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவித் தொகை 782 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கிறது என்றும் வெள்ளை மாளிகை இன்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் இந்த நிதியானது, சுயாதீன மனிதாபிமான நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படுகிறது.
இதற்கமைய, தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், குளிர்கால உதவிகள், அவசர உணவு மற்றும் குடிநீர் உதவிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஏற்கனவே ஒரு மில்லியன் மேலதிக கொவிட் தடுப்பூசிகளையும் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள நிலையில், வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4.3 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.