வொஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று!!

ஆசிரியர் - Editor II
வொஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று!!

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வொஷிங்டன் சுந்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் நாட்டைச் சேர்ந்த 22 வயதான வொஷிங்டன் சுந்தருக்கு, பெங்களுரில் வைத்து கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் மும்பையில் தங்கியுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் அவர்கள் தென்னாபிரிக்காவுக்கு பயணமாகவுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதியான வொஷிங்டன் சுந்தர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.


மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு