அனுபமாவின் லிப் கிஸ்!! -வைரலாகும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
அனுபமாவின் லிப் கிஸ்!! -வைரலாகும் புகைப்படம்-

தமிழ் சினிமா துறையில் கவர்ச்சி மற்றும் முத்தக்காட்சிகளுக்கும் மறுப்பு தெரிவித்து வந்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பின் அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார்.

திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தாவும் அனுபமா பரமேஸ்வரனும் கதாநாயகியாகளாக நடித்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது. அதன் பின் அவருக்கு வந்த பல படவாய்ப்புகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் இருந்ததால் அப்படங்களை அவர் நிராகரித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் கதாநாயகனாக நடிக்கும் ரவுடி பாய்ஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடித்து வருகின்றார். 

குறித்த படத்தின் டிரெய்லரில் அனுபமாவின் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. அனுபமா முதல் முறையாக இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவருடைய ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Radio