மீண்டும் ஏவுகணை சோதனை!! -ஒரே வாரத்தில் 2 ஆவது முறையாக நடத்திய வடகொரியா-

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் வடகொரியா கடந்த 5 ஆம் திகதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா கடந்த வாரம் புதன் கிழமை சோதனை செய்தது.
இந்நிலையில், அந்த சோதனை நடைபெற்று ஒருவாரம் கூட நிறைவடையாத நிலையில் வடகொரியா இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளது.
700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா சோதனை செய்த ஏவுகணை ஜப்பான் கடல் பகுதி அருகே நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.