SuperTopAds

இலங்கை பெண்களை திட்டமிட்டு ஏமாற்றும் லண்டன் வாசிகள்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

ஆசிரியர் - Editor II
இலங்கை பெண்களை திட்டமிட்டு ஏமாற்றும் லண்டன் வாசிகள்!! -அதிர்ச்சி தகவல் வெளியானது-

லண்டனில் வாழும் நபர் ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கையிலுள்ள இளம் பெண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

முகப்புத்தகம் (பேஸ்புக்), வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களில் பெண்களை  நண்பர்களாகி அவர்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி இலட்சக்கணக்கான பணம் கொள்ளையடித்துள்ளார். 

பிரித்தானியாவில் உள்ள நபருடன் இலங்கையில் உள்ளவர்கள் குழுவாக இணைந்து இந்த பண மோசடி நடவடிக்கை மேற்கொள்வதாக இலங்கை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லண்டனில் வாழும் கோடீஸ்வரர், வர்த்தகர், வைத்தியர் போன்ற புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டு புகைப்படத்தில் இருப்பது தான் என கூறி இலங்கையில் உள்ள நபர்களின் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக புகைப்படங்களை அனுப்புவதே இந்த மோசடியாளரின் முதற்கட்ட நடவடிக்கையாகும்.