பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்போருக்கான அறிவிப்பு!! -உள்துறை அமைச்சகம் வெளியிட்டது-

பிரித்தானியாவில் புகலிடம் கோருவதற்காக காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல் ஒன்றைய அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி அந்நாட்டில் 18 வயதுக்கு குறைவு என்று கூறி புகலிடம் கோருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவ்வமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்து வயதை கண்டுபிடிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.