ஜ.பி.எல் தொடரை மஹாராஷ்ரா மாநிலத்தில் நடத்த திட்டம்!!

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் தொடரை மஹாராஷ்ரா மாநிலத்தில் நடத்த திட்டம்!!

இந்தியன் பிரிமியர் லீக் (ஜ.பி.எல்) தொடரை கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு மஹாராஷ்ரா மாநிலத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், எதிர்வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஜ.பி.எல்) ரி-20 கிரிக்கெட் தொடரை பிரச்சனையின்றி முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2 வருட காலப்பகுதியினில் இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரி-20  போட்டிகளை நடத்துவதில் பெரும் சவால்களை எதிர்நோக்கியது. 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் (ஜ.பி.எல்) போட்டிகள் கூட ஐக்கிய அரபு ராச்சியத்திலேயே நடைபெற்றது.

2021 தொடரும் இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய ஊடக தகவல்களின்படி மஹாராட்ஷாவில் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Radio