நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி!!
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்திரந்த ஷோபனா தனக்கு ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வரும் அவர் இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது.
தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.