தனியார் பேருந்தும் - டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 26 பேர் படுகாயம்!

ஆசிரியர் - Editor I
தனியார் பேருந்தும் - டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 26 பேர் படுகாயம்!

பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களினதும் சாரதிகள் உட்பட 26 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிரே வந்த டிப்பரும் மூதுார் பட்டித்திடல் பகுதியில் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருக்கின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு