SuperTopAds

ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கல்முனைக்கு விஜயம்

ஆசிரியர் - Editor III
ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கல்முனைக்கு விஜயம்

சிலோன் மீடியா போரத்தினால் தகவல், வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரை பொன்னாடை போற்றி கௌரவிக்கும் நிகழ்வும், கிழக்கை தளமாக கொண்டு கடந்த ஒரு வருடமாக வெளிவந்து கொண்டிருக்கும் "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் சிறப்பு பிரதி அறிமுகமும், இவ்வாண்டுக்காண நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வும் சிலோன் மீடியா போரத்தின் தலைவரும் "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி றியாத் ஏ மஜீத் தலைமையில் சாய்ந்தமருது சீ பிரிஸ் சுற்றுலா விடுதியில் வியாழக்கிழமை(6)  நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த தகவல், வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஊடகத்துறை மேம்பாட்டுக்கான விடயதானங்கள், கிழக்கில் ஊடக இல்ல நிர்மாணம் போன்ற விடயங்களை சிலோன் மீடியா போரத்தினர் இந்த சந்திப்பின் போது அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன் தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளி வாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன பொருளாளரும், அக்கரைப்பற்று  அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். சபீஸ், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ.பாவா, சிலோன் மீடியா போரத்தின் பொருளாளரும் "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் சந்தைப்படுத்தல் முகாமையாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தின் பிரதித் தலைவரும் "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் உதவி ஆசிரியருமான எஸ். அஸ்ரப்கான், சிலோன் மீடியா போரத்தின் பிரதி செயலாளரும் "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் விளையாட்டு செய்தி ஆசிரியருமான எம்.எம். ஜபீர்,  "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் செய்தி ஆசிரியர்  எம்.எஸ்.எம்.ஸாகிர், உதவி ஆசிரியர் ஏ.எச்.எம். ஹாரிஸ், சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும், "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் சந்தைப்படுத்தல் உதவி முகாமையாளர்களுமான எம்.பி.எம். றிம்ஸான், எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜுன் லாபீர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.