SuperTopAds

150வது ஐபிஎல் போட்டியில் கப்டனாக களமிறங்கும் தோனி

ஆசிரியர் - Admin
150வது ஐபிஎல் போட்டியில் கப்டனாக களமிறங்கும் தோனி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை நடைபெற்ற தொடர்களில் 13 அணிகள் விளையாடி உள்ளன. இந்த 13 அணிகளையும் வெவ்வேறு வீரர்கள் தலைமை தாங்கியுள்ளனர்.

ஆனால் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி மட்டுமே இருந்து வருகிறார். அவர் 9வது சீசனாக சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். அவர் தலைமையில் சென்னை அணி  ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை தலா இரண்டு முறை கைப்பற்றியுள்ளது. மேலும் அவர் தலைமையில் சென்னை அணி அனைத்து சீசன்களிலும் நாக் அவுட் சுற்றுக்கு தகுது பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், டோனி தற்போது கேப்டனாக புதிய சாதனை படைக்க உள்ளார். அவர் இதுவரை 149 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக சென்னை அணியை வழிநடத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இது டோனி கேப்டனாக விளையாடும் 150வது ஐபிஎல் போட்டியாகும்.

இதன்மூலம் 150 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாட இருக்கும் முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைக்க உள்ளார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காகவும் 14 போட்டிகளில் டோனி கேப்டனாக விளையாடி உள்ளார்.