பதவி விலகுவதாக சூடான் பிரதமர் அறிவிப்பு!!
சூடான் நாட்டு மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சூடானில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதுடன், அப்துல்லா ஹம்டொக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தத்திற்கு அமைய, அவர் இராணுவத்தினால் பிரதமராக பதவியமர்த்தப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, குறித்த இரகசிய ஒப்பந்தத்தினை இரத்து செய்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்துமாறு கோரி, சூடானிய மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டங்களை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அப்துல்லா ஹம்டொக் தெரிவித்துள்ளார். சூடான் தற்போது, ஆபத்தான நிலையில் உள்ளது.
அந்த பேரழிவினை தடுப்பதற்கு தாம் முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை. எனவே, வேறொரு சிறந்த நபருக்கு அந்த பொறுப்பினை வழங்கவே தாம் பதவி துறப்பதாக அப்துல்லா ஹம்டொக் குறிப்பிட்டுள்ளார்.