எல்.பி.எல் வெற்றிக் கிண்ணம் யாழ்ப்பாணத்தில்!! -கொண்டுவந்தார் ஜெப்னா கிங்ஸ் முகாமையாளர்-
ஏல்.பி.எல் ரி-20 கிரிக்கெட் சுற்றுத் தொடரில் வெற்றியீட்டிய ஜெப்னா கிங்ஸ் அணியின் வெற்றிக் கிண்ணம் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவ்வணியின் முகாமையாளரும் பணிப்பாளருமான கரி வாகீசனினாலேயே அந்த வெற்றிக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்க கொண்டுவரப்பட்டுள்ளது. வெற்றிக் கிண்ணத்தை கொண்டுவந்த அணி முகாமையாளர் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்:-
எமது அணியானது வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் வீரர்களை அணியில் இடம் பெறச் செய்தது. வடக்கு கிழக்கில் துடுப்பாட்டத்தில் திறமையான வீரர்கள் பலர் இருக்கின்ற நிலையில் அவர்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு கடந்தகால யுத்தம் ஒரு காரணமாக அமைந்தது.
அதுமட்டுமல்லாது துடுப்பாட்ட ஆடுகளம் வடக்கு கிழக்கு வீரர்களுக்கு ஓர் தடையாக இருக்கின்ற நிலையில் அதனை தற்போது படிப்படியாக நிறைவேற்றிக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.
இவரிடம் இடம்பெறவுள்ள போட்டிகளுக்கான வீரர்களின் தெரிவுகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் எமது அவதானிப்பில் உள்ள நிலையில் உரிய நேரத்தில் அதற்கான தெரிவுகளை மேற்கொள்வோம்.
ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களை துடுப்பாட்ட நீதியில் சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதற்கு நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.