SuperTopAds

இங்கிலாந்து கடற்கரை பாறைகளில் டைனோசர்களின் கால்தடம்!!

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்து கடற்கரை பாறைகளில் டைனோசர்களின் கால்தடம்!!

இங்கிலாந்து நாட்டின் கடற்கரையில் உள்ள பாறைகளில் பதிவாகியிருந்தது டைனோசர்களின் கால்தடம் தான் என்பது ஆராட்சியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சதர்ன் வேல்ஸ் கடற்கரையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக கால்தடங்கள் போன்ற அமைப்பு காணப்பட்டது. கடந்த ஆண்டு பார்க்கப்பட்ட இந்த அமைப்புகளை லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.

தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி இவை 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சரோபோடோமார்ப் என்ற டைனோசரின் கால் தடம் என்பது உறுதியாகி உள்ளது. 

நீண்ட கழுத்தைக் கொண்ட இந்த வகை டைனோசர்கள் தாவர உண்ணிகளாக இருந்ததும் வேல்ஸ் கடல் பகுதியில் அவை ஏராளமாக உலா வந்ததும் தெரியவந்துள்ளது.