SuperTopAds

விவாகரத்து செய்த டி.இமான்!!

ஆசிரியர் - Editor II
விவாகரத்து செய்த டி.இமான்!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்னில் ஒருவராக உள்ள இசையமைப்பாளர் டி.இமான் தானும் தனது மனைவியும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்:- வாழ்வில் நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன் - மனைவி இல்லை. 

எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார். 

இருவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.