SuperTopAds

வேகமெடுக்கும் ஒமைக்ரான்: உலகம் முழுவதும் 6000 விமானங்கள் ரத்து!

ஆசிரியர் - Admin
வேகமெடுக்கும் ஒமைக்ரான்: உலகம் முழுவதும் 6000 விமானங்கள் ரத்து!

கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் சுமார் 6000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. அவ்வப்போது கொரோனாவில் இருந்து புதிய மாறுபாடுகள் உருமாறி வருகின்றது.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் உருமாறிய புதிய வகை Omicron வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் Omicron வைரஸ் மிக மோசமாக தாக்கி வருகிறது.

இதுவரை சுமார் 110 நாடுகளில் Omicron கால்பதித்துள்ளதாக உலக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதையடுத்து உலகம் முழுவதும் Omicron மேல் உள்ள அச்சத்தால் சுமார் 6000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டத்திற்காக பலரும் வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என்பதால் Omicron பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பல நாடுகள் அச்சத்தில் உள்ளன.

எனவே ஒரு சில நாடுகள் வருகின்ற நாட்களில் விமான சேவைகளை ரத்து செய்து வருகின்றது. நேற்று மட்டும் உலகம் முழுவதும் 2,800 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து இன்று 1100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை வரை Omicronனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய விமானங்களே ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.