கொரோனாவால் பரிதவிக்கும் பிரான்ஸ்: ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1.22 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவை தொடர்ந்து உலகையே உலுக்கி வருகிறது ஓமிக்ரான் வைரஸ். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் முதலில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் தற்போது 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்கு ஓமிக்ரான் விகாரமே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் 7வது இடத்தில் உள்ளது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90.88 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.22 லட்சத்தை தாண்டியுள்ளது.