SuperTopAds

மலேசியாவை புரட்டிப்போட்ட கனமழை: 46 பேர் பலி!

ஆசிரியர் - Admin
மலேசியாவை புரட்டிப்போட்ட கனமழை: 46 பேர் பலி!

மலேசியாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குறைந்தது 5 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா கடந்த வாரம் பெய்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை மழைக்காலம் என்றாலும், இந்த ஆண்டு மலேசியாவில் அதிக மழை பெய்துள்ளது.

தொடர் கனமழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மலேசியாவின் தீபகற்ப மாகாணத்தில் உள்ள பகாங் மற்றும் சிலாங்கூர் நகரங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மொத்தம் 54,532 பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5 பேரை காணவில்லை. அவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என நம்புகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.