திருக்கோவில் பொலிஸ் நிலைய சம்பவம்- துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்
திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபரை சனிக்கிழமை(25) மாலை ஆஜர் செய்யப்பட்டபோது அவர் இந்த உத்தரவை வழங்கினார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர் தனது வாகனத்தில் தப்பித்து மொனராகல – எத்திமல பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து அம்பாறை மாவட்டத்துக்கு அழைத்து வந்திருந்த நிலையில் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.