SuperTopAds

திருமணம் செய்ய மறுத்த இளம் பெண் கொலை!! -3 திருமணமானவர் வெறிச்செயல்-

ஆசிரியர் - Editor II
திருமணம் செய்ய மறுத்த இளம் பெண் கொலை!! -3 திருமணமானவர் வெறிச்செயல்-

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 25 வயது இளம்பெண்ணை 36 வயதான டாக்சி டிரைவராக உள்ள ஒருவர் படுகொலை செய்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

மேற்குவங்காளத்தை சேர்ந்த குறித்த டாக்சி டிரைவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடவைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி பால் வாங்க சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த நர்ஹிஸின் தந்தை தனது மகளை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 

தேடுதல் மேற்கொண்ட பொலிஸ் செப்டம்பர் 23 ஆம் திகதி அப் பெண்ணை சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் அப் பெண்ணை கொலை செய்த டாக்சி டிரைவரை கைது செய்துள்ளனர். 

தன்னை திருமணம் செய்த நர்ஹிஸ் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்ததாக கைதான டாக்சி டிரைவர் தெரிவித்துள்ளார்.