நாட்டை உலுக்கிய திருக்கோவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
திருக்கோவில் பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதுடன், 2 பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று (25) இரவு 11.30 மணியளவில்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்ததுடன்
படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மேலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.