கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை!! -வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்-
கனடா நாட்டில் அடுத்த ஆண்டு தங்கள் மேலும் பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் மகிழ்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினர் நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் தற்காலிக அடிப்படையில் நாட்டில் வசித்து வருவதாக குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.
அந்நாட்டில் தற்போது தனது மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் திறமையான பணியாளர்களை நியமித்து வருகிறது.
அந்நாட்டில் வயது முதிர்ந்த மக்கள்தொகை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடு என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவது ஒரு நூற்றாண்டில் இதுவே முதல்முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, 2020 இல் 185,000 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 45மூ குறைவு.
தற்போது நாட்டின் மக்கள்தொகை சுமார் 38 மில்லியனாக உள்ளது, மேலும் அதை ஆண்டுதோறும் ஒரு வீத அதிகரிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 411,000 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசு கூறுகிறது.