இந்தியாவில் 358 பேருக்கு ஓமைக்ரான்!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் 358 பேருக்கு ஓமைக்ரான்!!

இந்தியாவில் ஒமைக்ரான் திரிபு வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதித்தவர்களில் 114 பேர் குணம் அடைந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில்  122 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 88 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 67 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.