மருத்து கட்டமைப்பு இல்லாததால் தடுப்பூசி போடுவதில் பின்னடைவு!! -நைஜீரியாவில் 10 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் அழிப்பு-
உலக சுகாதார ஸ்தாபனம் நைஜீரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் போதிய மருத்துவ கட்டமைப்பு இன்மையால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், நன்கொடையாக பெறப்பட்ட 10 இலட்சம் அஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொவிட் தடுப்பூசிகளை நைஜீரிய அரசு மண்ணில் புதைத்து அழித்துள்ளது.