SuperTopAds

யாழ்.சிறையிலுள்ள 69 மீனவர்களையும் விடுவிக்கக் கேரி ராமேசுவரத்தில் 4 ஆவது நாளகவும் வேலைநிறுத்தம்!! -போராட்டம் விரிவடையும் எனவும் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
யாழ்.சிறையிலுள்ள 69 மீனவர்களையும் விடுவிக்கக் கேரி ராமேசுவரத்தில் 4 ஆவது நாளகவும் வேலைநிறுத்தம்!! -போராட்டம் விரிவடையும் எனவும் எச்சரிக்கை-

இந்தியாவின் ராமேசுவரம் மீனவர்கள் இன்று வியாழக்கிழமை 4 ஆவது நாளாகவும், மண்டபம் மீனவர்கள் 2 ஆவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த 18 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக 19 ஆம் திகிதி மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் 69 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட 69 மீனவர்களையும், அவரது விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

ராமேசுவரம், மண்டபம், பாம்பனை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்த 3 பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு மீன் வர்த்தகம் 4 கோடி வரை நடைபெறும். மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் தற்போது வரை 10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்தால் ராமேசுவரம், மண்படம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது மட்டுமின்றி, இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறும் 20 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.