SuperTopAds

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்!! -இரவு நேரக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்!! -இரவு நேரக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்-

இந்தியாவில் ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ள நிலையில் அங்கு இரவு நேரக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக தீவிர நிலைமையை அடுத்து, அங்கு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தற்போது 14 மாநிலங்களில் 213 பேருக்கு ஒமிக்ரோன் பரிசோதனையில் தொற்று  கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா தொற்றுப்பு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்குமாறும் வைத்தியசாலைகளில் வசதிகளை மேம்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மேலும் அறிவுறுத்தியுள்ளது.