SuperTopAds

அவிஷ்க பெர்னாண்டோ சதம்!! -தம்புள்ளையை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது ஜப்னா கிங்ஸ்-

ஆசிரியர் - Editor II
அவிஷ்க பெர்னாண்டோ சதம்!! -தம்புள்ளையை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது ஜப்னா கிங்ஸ்-

எல்.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் 23 ஓட்டங்களினால் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சதம் விளாசி நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை தனதாக்கியும் உள்ளார். 

இந்த வெற்றியுடன் ஜப்னா கிங்ஸ் நாளை வியாழககிழமை நடக்கவிருக்கும் எல்.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் பானுக ராஜபக்ஷ தலiமையிலான காலி கிளடியேட்டர்ஸ{டன் பலப்பரீட்சை நடத்தும்.

இந்த ஆட்டம் நாளை வியாழக்கிழமை ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.