துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி வன்புணர்வு!! -பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்கு-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர், துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி கற்பழிப்புக்கு உதவியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷாவும், இவரது நண்பர் பர்ஹான் துப்பாக்கி முனையில் மிரட்டி 14 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளனர். மேலும், அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
நடந்த விடயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அச் சிறுமியை அவர்கள் மிரட்டியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷலிமார் பொலிஸ் நிலையத்தில் அந்த சிறுமி முறைப்பாடு செய்துள்ளார். இதன் அடிப்படையில் யாசீர் ஷா மீது பொலிஸார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.