SuperTopAds

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் இருவர் படுகொலை!! -கேரளாவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்-

ஆசிரியர் - Editor II
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் இருவர் படுகொலை!! -கேரளாவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்-

இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கு பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இன்று சமூக ஜனநாயக கட்சியின் இராஜாங்க செயலாளர் கே.எஸ். ஷான் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மகிழுந்தில் வந்த சிலர் அவரை தாக்கிக் கொலை செய்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 12 மணி நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரென்ஜித் சிறினிவாசனின் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவங்களுக்கு தமது கண்டனத்தை மாவட்ட தலைமை அமைச்சர் வெளியிட்டுள்ள நிலையில், கொலைகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.