SuperTopAds

முதியவர் சிறுநீரகத்தில் 156 கற்கள்!! -3 மணி நேரத்தில் அகற்றிய வைத்தியர்கள்-

ஆசிரியர் - Editor II
முதியவர் சிறுநீரகத்தில் 156 கற்கள்!! -3 மணி நேரத்தில் அகற்றிய வைத்தியர்கள்-

இந்தியாவின கர்நாடக மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் 50 வயது முதியவர் ஒருவர் திடீரென கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ஐதராபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட வைத்தியர்கள், அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் லேப்ரோஸ்கோபி, எண்டோஸ்கோப்பி துணைக்கொண்டு அவரது சிறுநீரகத்தில் இருந்து 156 கற்களை அகற்றியுள்ளனர். 

3 மணி நேர சிகிச்சைக்கு பின் அவரது சிறுநீரகத்தில் உள்ள அனைத்து கற்களும் அகற்றப்பட்டு இப்போது அவர் நலமாகவுள்ளார் என்றும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.