மக்கள் சிரிப்பதற்கு தடை!! -வடகொரியா அரசு அதிரடி அறிவிப்பு-
வடகொரியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜாங் இல்லின் 10 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு அந் நாட்டு குடிமக்கள் 10 நாட்களுக்கு சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையிலேயே அந்நாட்டில் வாழும் மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் ஒன்றாக சிரிப்பதற்கான தடையும் அடங்கும்.
அந்நாட்டு மக்கள் மது அருந்துவது, சிரிப்பது, மளிகை பொருட்கள் வாங்குவது அல்லது ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சினுய்ஜூவில் வசிக்கும் நபர் ஒருவர் ரேடியோ தெரிவித்துள்ளார்.
10 நாள் துக்கக் காலத்தில் தடையை மீறுவது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.