SuperTopAds

கடன் தொல்லையால் 10 வயது மகனை கொன்று தம்பதியர் தற்கொலை!!

ஆசிரியர் - Editor II
கடன் தொல்லையால் 10 வயது மகனை கொன்று தம்பதியர் தற்கொலை!!

கடன் தொல்லை காரணமாக தமது 10 வயது மகனை கொன்று விட்டு கணவன் -மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் 43 வயதான சிவாஜி, 33 வயதான அவரது மனைவி வனிதா என்பவர்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு 10 வயதான வெற்றிவேல் என்ற மகனும் உள்ளார். 

சிவாஜிக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டார். இதனால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

பணம் கொடுத்தவர்கள் சிவாஜிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை நீண்ட நேரம் வரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அயல் வீட்டில் வசிப்பவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள அறையில் சிவாஜி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதன் அருகே தரையில் வனிதாவும், மகன் வெற்றிவேலும் இறந்த நிலையில் கிடந்தனர். 

இதனை பார்த்த அயர் வீட்டிர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலங்களை அகற்றி விசாணைகளை ஆரம்பித்தனர்.