SuperTopAds

பெலருஸ் எதிர்க்கட்சி தலைவரின் கணவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!!

ஆசிரியர் - Editor II
பெலருஸ் எதிர்க்கட்சி தலைவரின் கணவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!!

ஐரோப்பிய நாடான பெலருஸ் எதிர்க்கட்சித் தலைவரின் கணவர் 43 வயதான செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு அந் நாட்டு நீதிமன்றம் 18 வருடகால சிறைத்தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய பெலருஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டியமைக்காகவே அவருக்கு இந்த தண்னை வழங்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பல மாதங்கள் நீடித்த விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்றம் கலகங்களை ஏற்பாடு செய்ததற்காகவும், சமூக வெறுப்பைத் தூண்டியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட டிகானோவ்ஸ்கிற்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.