SuperTopAds

சபரிமலை சென்ற இரு பக்தர்கள் உயிரிழப்பு!!

ஆசிரியர் - Editor II
சபரிமலை சென்ற இரு பக்தர்கள் உயிரிழப்பு!!

கேரளா பம்பை நதிக் கரையிலிருந்து சபரிமலை ஏறும்போது, தமிழகத்தை சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து நாளாந்தம் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று தரிசனம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் நீலிமலை, அப்பச்சி மேடு மலைப்பாதை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அவ்வழியாகவும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளங்கோவன் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரன் ஆகியோருக்கு பம்பையில் இருந்து மலை ஏறும்போது திடீர் சுகயீனம் ஏற்பட்டது. உடனே இருவரையும் பம்பை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.