21 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்தியாவுக்கு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம்!!

ஆசிரியர் - Editor II
21 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்தியாவுக்கு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம்!!

இஸ்ரேலின், இலாத் நகரில் இடம்பெற்ற 70 ஆவது பிரபஞ்ச அழகி போட்டியில் (மிஸ் யுனிவர்ஸ்) இந்தியா நாட்டைச் சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சந்து பிரபஞ்ச அழகியாக முடிசூடினார்.

இந்நிலையில் குறித்த அழகி பட்டத்தை வென்ற 3 ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் தனதாக்கிக்கொண்டார். பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்ட ஹர்னாஸ் ஒரு மொடல் அழகி என்பதுடன், அவர் மிஸ் திவா போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன், அவர்கள் அனைவரையும் தோற்கடித்து பிரபஞ்ச அழகி கிரீடத்தை அணியும் வாய்ப்பு பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸ{க்கு கிடைத்துள்ளது.

அதற்கமைய, 21 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவுக்கு பிரபஞ்ச அழகி பட்டம் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.